மொபைலை டேப்லட் ஆக பயன்படுத்த புதிய மொபைல் அறிமுகம் | Flaxpai

Royal நிறுவனம்

    உலகில் முதல் flexible டிஸ்ப்ளே கொண்ட மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் முதல் முதலாக flexible டிஸ்ப்ளே கொண்ட மொபைலை அறிமுகப்படுத்துவதாக இருந்தது, ஆனால் தற்பொழுது ராயல் என்று சொல்லக்கூடிய நிறுவனம் இந்த flexible டிஸ்ப்ளே மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. FlexPai என்று சொல்லக்கூடிய இந்த மொபைல் பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

    இந்த மொபைலில் கிட்டத்தட்ட எட்டு இன்ச் டிஸ்ப்ளே கொடுத்துள்ளனர். இந்த எட்டு இன்ச் கொண்ட டிஸ்ப்ளேவை நாம் ஒரு டேப்லெட் ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த மொபைலை மடக்குவதன் மூலம் 4 inch கொண்ட டிஸ்ப்ளே மொபைலாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மொபைலில் 8 ஜிபி ரேம் 256 ஜிபி inbuilt storage கொடுத்துள்ளனர், மேலும் இந்த மொபைலில் 128 ஜிபி மெமரி கார்டு பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த மொபைலில் 6 ஜிபி ரேம் 128 ஜிபி inbuilt storage கொடுத்துள்ளனர், மேலும் இந்த மொபைலில் 128ஜிபி மெமரி கார்டு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு 9.0 பை அப்டேட்டில் கிடைக்கிறது. மேலும் இந்த மொபைலில் usb type-c, பிங்கர் பிரிண்ட் , ஃபாஸ்ட் சார்ஜிங் என குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பம்சங்கள் உள்ளது.

 

கேமரா

    இந்த மொபைலில் 20 எம்பி டெலிஃபோட்டோ கேமரா, 16 எம்பி வைட் ஆங்கிள் கேமரா என இரண்டு கேமராக்கள் கொடுத்துள்ளனர். இந்த கேமராக்களை ரியர் கேமராவாகவும், அதேபோல் இந்த மொபைலை மடக்குவதன் மூலம் செல்பி கேமராவாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  மேலும் இந்த மொபைலில் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் என்று சொல்லக்கூடிய ஒரு புதிய அம்சம் உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் உங்களுக்கு வரக்கூடிய நோட்டிபிகேஷன்களை நீங்கள் உங்கள் டிஸ்ப்ளேயில் சைடில் பார்த்துக்கொள்ள முடியும்.

சார்ஜ் பொருத்தவரை

    இந்த மொபைலில் உடைய பேட்டரி கெபாசிட்டி 6000 மில்லி ஆம்பியர் ஆகும். பொதுவாக 6000 மில்லி ஆம்பியர் கொண்ட மொபைலை 2 ஏ சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது ஒரு மணி நேரத்திற்கு 32% சார்ஜ் ஆகும். பாஸ்ட் சார்ஜ் மொபைல் என்றால் ஒரு மணி நேரத்திற்கு 56% சார்ஜ் ஆகும். ஆனால் இந்த மொபைலில் ஒரு மணி நேரத்துக்கு 80% சார்ஜ் ஆகிறது. இந்த மொபைலின் விலை யை பொருத்தவரை 6 ஜிபி ரேம் கொண்ட மொபைல் 95,000 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல் ஒரு லட்சத்து 35 ரூபாய்க்கும் கிடைக்கிறது மேலும் இந்த மொபைலில் பல அம்சங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த மொபைல் தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் நீங்கள் வாங்குவீர்களா? மாட்டீர்களா? என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post