பிப்ரவரி மாதத்திற்கான சூப்பர் ஆக்சன் கேம் | METAL RANGER

கேமின் அளவு

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சூப்பர் ஆக்சன் மற்றும் சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் விளையாடி பார்க்கவும். Metal Ranger. Classic Platformer Shooter Game என்று சொல்லக்கூடிய இந்த கேமை Albert Zig என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 87 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இது ஒரு மெட்டல் ஆக்சன் மற்றும் சூட்டிங் கேம் ஆகும். இது ரோபோ மற்றும் அனிமேஷன் வடிவம் கொண்ட விலங்குகளைப் போல் காட்சியளிக்கும் கிராபிக்ஸ் வடிவங்களை சுட்டுத்தள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் வித்தியாசமான கிராபிக்ஸ் வடிவம் மற்றும் இதனுடைய பின்புற வடிவம் சுற்றுப்புற வடிவம் அனைத்தும் ஒரு தொழிற்சாலையில் அல்லது சுரங்கப்பாதையில் அல்லது லேபில் சண்டையிடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வரக்கூடிய அனிமேஷன் வடிவம் கொண்ட விலங்குகளை கொன்றுவிட்டாள் உங்களுக்கு ஆயுதங்கள் அப்கிரேட் ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் மிகவும் பெரிதாக சொல்லக்கூடிய அளவிற்கு லைட் எஃபெக்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பல வித்தியாசமான ஆயுதங்கள் பயன்படுத்தும் வகையில் ரோபோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் வடிவமைக்கப்பட்டுள்ள மியூசிக் சிஸ்டம் மிகவும் அற்புதமாக இதுவரையில் கொடுக்கப்படாத மியூசிக் சிஸ்டம் ஆக உள்ளது. இந்த கேம் விளையாடுவதற்கு ஒரு சிறந்த அனுபவமும் அடுத்த தலைமுறைகள் சொல்லக்கூடிய அளவிற்கு சிம்பிள் மற்றும் ஆர்வமாக விளையாடக் கூடிய கேமாக இருக்கிறது. மேலும் இந்த கேமில் இன்ட்ரஸ்டிங்கான 3d levels அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது துப்பாக்கி மற்றும் பயர் ஷூட்டிங் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post