பிப்ரவரி மாதத்திற்கான பெஸ்ட் கேம்ஸ் | INJUSTICE

கேமின் அளவு

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சூப்பர் ஹீரோக்களுக்கும் மிகச்சிறந்த வில்லன்களுக்கும் இடையில் நடக்கக்கூடிய சண்டைக் காட்சிகளை கேமாக விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் உங்களுக்கு இந்த கேம் தேவைப்படும்.  Injustice: Gods Among Us என்று சொல்லக்கூடிய இந்த கேமை Warner Bros. International Enterprises என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 32 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த ஆக்சன் கேமை பொறுத்தவரையில் 2 குழுக்களுக்கு இடையில் நடக்கக்கூடிய சண்டைக்காட்சிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு குழு சூப்பர் ஹீரோக்கள் மற்றொரு குழு கொடூரமான வில்லன் இந்த சூப்பர் ஹீரோக்கள் அந்த கொடூரமான வில்லன்களை அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது தான் இந்த கேம். இந்த கேம் மல்டி பிளேயர் விளையாடக்கூடிய கேம் ஆகும். விளையாடக்கூடிய ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்கள் ஆவார்கள். அடுத்து இந்த கேமின் வரக்கூடிய சண்டைக்காட்சிகள் மூன்றுக்கு மூன்று என்ற வகையில் போட்டி போடக்கூடிய தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஹீரோவும் வில்லனும் மூன்று தடவை சண்டையிட வேண்டும். அதில் இரண்டு முறை யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் அந்த மூன்று முறையில் அந்த வில்லனை ஹீரோ கொன்றுவிட்டால் அவர் அடுத்த லெவலுக்கு செல்கிறார். மேலும் இந்த கேம் ஆன்லைனில் விளையாடக்கூடிய கேம் ஆகும். அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான சண்டைக் காட்சிகள் இருக்கக்கூடிய ஹீரோக்கள் அனைவரும் சூப்பர் மேன் பேட்மேன் ஜோக்கர்  இது போன்ற நிறைய ஹீரோக்கள் படத்தில் வரக்கூடிய போல் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சினிமாவில் வரக்கூடியது போல் உண்மையாகவே எச்டி கிராபிக்ஸ் கொண்டு 3d அனிமேஷன் வடிவத்தில் மிகச்சிறந்த சண்டை காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த கேம் ஆகும். மேலும்  விளையாடக்கூடிய ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பவர் இருக்கிறது. அதேபோன்றுதான் விளையாடக்கூடிய ஒவ்வொரு கொடூரமான வில்லனுக்கும் தனி பவர் இருக்கிறது. அந்த பவர் பயன்படுத்தி வில்லனுடைய பவர் மற்றும் சக்தியை அளிக்க வேண்டும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post