அனைத்து வேலைகளையும் பார்க்கக்கூடிய புதிய இயந்திரம்


யாருக்கெல்லாம் தேவைப்படும்

    நீங்கள் ஒரு அலுவலகம் வைத்துள்ளீர்கள் என்றாலும் அல்லது புதிதாக ஒரு அலுவலகம் வைக்கப் போகிறீர்கள் என்றாலும் சரி. உங்களுக்கு இது நிச்சயம் பயன்படும். மேலும் அதிகப்படியாக வேலைக்கு ஆட்கள் வைத்துள்ளீர்கள் என்றால் அவர்களுக்கு பதில் இதை கூட நம்மால் வைத்துக் கொள்ள முடியும். இந்த இயந்திரத்தை வைத்தால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது மிச்சமாகும். மேலும் வேலைகளை மிக விரைவாக முடிக்க வேண்டுமென்றால் இதை பயன்படுத்தவும். மேலும் இது என்ன என்பதை நாம் இந்த கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாம்.

கருவியைப் பற்றி

 

    4-Axis Cooperative Robotic Arm என்று சொல்லக்கூடிய இந்த கருவியை மனிதர்கள் பார்க்கக் கூடிய அனைத்து வேலைகளையும் மிகச் சுலபமாகவும், விரைவாகவும் பார்த்துவிடும். உதாரணத்திற்கு, இந்த கருத்தை பயன்படுத்தி டிசைன் செய்யவும், Soldering  செய்யவும், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அகற்றவும், பழுது பார்க்கவும், மேலும் உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் இந்த கருவி செய்து கொடுத்துவிடும். மேலும் இந்த கருவி 1.5 கிலோ எடையை தூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஒரு எடைகுறைந்த இயந்திரமாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக தூக்கி செல்லலாம். மேலும் இந்த கருவியை பயன்படுத்தி ஏதாவது ஒரு பொருளை நம்மால் உருவாக்க முடியும். இன்னும் இந்த கருவியில் பல அம்சங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

பயன்படுத்துவது எப்படி

 

    மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இந்த இயந்திரம் செய்து முடித்து விடும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு Program மூலம் அதற்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி சரியாக தெரியப்படுத்திவிட்டால் அந்த வேலையை இந்த இயந்திரம் உடனடியாக செய்து கொடுத்துவிடும். தெரியப்படுத்த உங்களுடைய மொபைல் மூலமாகவோ அல்லது கணினி மூலம் தெரியப்படுத்தலாம். இந்த இயந்திரத்தில் ப்ளூடூத் மற்றும் வைபை அம்சம் உள்ளது. ஆகையால் இந்த இயந்திரத்திற்கு இதன் வழியே மிக இலகுவாக தெரியப்படுத்த முடியும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தி ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலையை இந்த இயந்திரம் செய்து முடித்து விடும். அதுவும் மிகவும் விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்கும். இந்தக் கருவியை பயன்படுத்துவதால் வேலைக்கு கொடுக்கக்கூடிய சம்பளங்களை  மிச்சப்படுத்தலாம். மேலும் வேலை ஆட்கள் என்றால் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள். ஆனால், இந்த கருவி மூலம் நம்மால் 24 மணி நேரமும் வேலை வாங்கிக் கொள்ள முடியும்.

மேலும் தகவல்களுக்கு


    இந்தக் கருவியை பற்றிய மேலும் தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டாலும் அல்லது இந்த கருவிகள் நீங்கள் வாங்க நினைத்தாலும் அதற்கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன். அதன் மூலம் இந்தக் கருவியை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
 


 

உங்கள் ஆதரவு தேவை


    இது போல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post