Blackberry மொபைல் களை ஏன் தடை செய்கிறார்கள்


Blackberry மொபைல்ஸ் தடை

    தற்போது இணையதளத்தில் பரவலாக காணப்படும் தொழிநுட்ப செய்தி என்னவென்றால், blackberry மொபைல்களை ஒரு சில நாடுகளில் தடை செய்து வருகின்றனர். அதற்கு என்ன காரணம்?  ஏன் தடை செய்கிறார்கள்? என்பதை இந்த கட்டுரையின் நாம் முழுமையாக பார்க்கலாம்.

சவுதி அரேபியாவில்

    Blackberry மொபைல்களை ஒரு சில நாடுகளில் தடை செய்து வருகின்றனர். இதற்கு முன்பாக UAE மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஏற்கனவே Blackberry மொபைல் மூலம் பயன்படுத்தக்கூடிய email, web browsing, messages போன்றவற்றை தடை செய்துள்ளனர். மேலும் இந்த மொபைலையும் தடை செய்துள்ளனர். ஏன் தடை செய்கிறார்கள் என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

எப்படி பயன்படுகிறது

    இந்த Blackberry மொபைல் ஐ ஏன் தடை செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் இந்த மொபைல் எப்படி பயன்படுகிறது என்பது தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. ஆகையால் இந்த மொபைல் எப்படி பயன்படுகிறது என்பதை நாங்கள் கீழே Photo  வடிவில் கொடுத்துள்ளோம். முதலில் அதை View Image செய்து பார்க்கவும்.





    மற்ற மொபைல்களில் நாம் பகிரக்கூடிய தகவல்கள் அல்லது நாம் மற்றவர்களுடன் பேசக்கூடிய விஷயங்களும் இணையதளத்தில் ஏதாவது ஒரு இடத்தில் Data வாக பதிவாகிக் கொண்டு இருக்கும். ஆனால் இந்த மொபைல் மூலம் நாம் பகிரக்கூடிய எந்த ஒரு தகவலும், எந்த இடத்திலும் பதிவாகாது. இவ்வாறுதான் இந்த மொபைல் செயல்படுகிறது.

 

தீவிரவாதிகளுக்கு சாதகம்

    இந்த மொபைல் மூலம் பகிரக் கூடிய எந்த ஒரு தகவலும் எந்த இடத்திலும் பதிவாக காரணத்தினால் இது அரசாங்கத்தால் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது military போன்ற இடங்களில் இந்த மொபைல் மிகப் பாதுகாப்பாக ஒரு தகவலை பரிமாறுவதற்கு பயன்படுகிறது. ஆனால், இந்த மொபைலில் இதுவேதான் குறையாகவும் காணப்படுகிறது. அதாவது அரசுக்கு இந்த மொபைல் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதோ அதேபோல் தீவிரவாதிகளுக்கும் இந்த மொபைல் மிக ரகசியமாக தகவல்களை பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகையால்தான் இந்த மொபைலை பல நாடுகளில் தடை செய்துள்ளனர்.

இந்தியாவிலும்

    இந்த மொபைல் இந்தியாவில் இன்னும் தடை செய்யப்படவில்லை. ஆனால், தடை செய்யலாமா? வேண்டாமா? என்ற பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த மொபைலை இந்தியாவில் தடை செய்வார்களா? மாட்டார்களா?  என்பதைப்பற்றி உங்கள் கருத்துகளை comments மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதேபோல் தொழில்நுட்ப தகவல்களுக்கு நமது இணைய தளத்தை பின்பற்றவும்.

0 comments

Post a Comment

Related Post